Posts

எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உள்ளது

 எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் உள்ளது. இன்றைய காலத்தில் நகரங்களில் உணவுகளை உணவகத்திற்கு நேரடியாக சென்றும் வாங்கலாம். திறன் பேசியில் உள்ள உணவு வழங்கும் செயலி வழியாக ஆணை செய்தால் வீட்டிற்கு வந்தும் தரப்படுகிறது. வீட்டிற்கு வந்து தருவதால் தூரத்திற்கு ஏற்றார் போல் வழங்கல் கட்டணமும் செலுத்த வேண்டும்.  இதற்கு கூடுதலாக காசு செலவிடுவதால் நேரம் மிச்சப்படுகிறது. உணவு வந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் நாம் வீட்டில் வேறு வேலை பார்க்கலாம்.  உணவகத்திற்கு நேரடியாக சென்று சாப்பிட்டால் காசை மிச்சப்படுத்தலாம். இன்னொரு பக்கம், உணவகம் அமைந்திருக்கும் தூரத்திற்கு ஏற்றார் போல் நேரம் கூடுதலாக செலவிடப்படும்.