அறிவுரை, பா, சிந்தனை துளிகள், 1. அன்பின் மூலமாக செய்யப்பட்டும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை வரவழைக்கும். 2. அகத்தில் குழந்தையாக இருங்கள். புறத்தில் அறிஞராக செயல்படுங்கள். - ஸ்ரீ பகவத் ஐயா 3. ஊக்கமது கைவிடேல். - ஆத்திசூடி. 4. தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி. 5. நீ என்பது உடலா? உயிரா? பெயரா? மூன்றும் அல்ல, செயல். - கோச்சடையான். 6. தோல்விக்கு இதயத்தில் இடம் கொடுக்காதே..வெற்றிக்கு தலையில் இடம் கொடுக்காதே.. ௭. எண்ணங்களில் கவனம் வையுங்கள், அவை சொற்களாகின்றன.. சொற்களில் கவனம் வையுங்கள், அவை செயல்களாக மலர்கின்றன.. செயல்களில் கவனம் வையுங்கள், அவை பழக்கங்கலாகப் படிகின்றன.. பழக்கங்களில் கவனம் வையுங்கள், அவை உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. ௮. தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தோடு இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். ௯. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. - பழமொழி. ௰. ஒவ்வொரு நாளும் உன் திறமையை அதிகரிக்க ஒரு வாய்ப்பு.